விஜய் பட அப்டேட் : ரசிகர்கள் உற்சாகம்…
சென்னை:
அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், த.வெ.க., தலைவர் விஜய் நடிக்கும் படம் வெளியாகும், ‘அப்டேட்’ காரணமாக, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.நடிகர் விஜய், கடந்த, 2024ம் ஆண்டு, பிப்ரவரி, 2 ம் தேதி, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கினார்.
அதை தொடர்ந்து, முழுமையாக அரசியலில் ஈடுபாடு காட்டினார்.அதனால், அவரது, 69 படமான, ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு, நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.
அதை தொடர்ந்து தீவிர அரசியல் பணியுடன், ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பும் தொடர்கிறது.இந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர், 27ம் தேதி, விக்கிரவாண்டியில், கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி, பிரம்மிக்க வைத்தார்.
வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்த படம் அரசியல் திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அவரது அரசியல் பணி மற்றும் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அந்த படத்திற்கு, அவரது ரசிகர் மற்றும் தொண்டர்கள் மத்தியில், பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
அதனால், ஜனநாயகன் படம் குறித்த, ‘அப்டேட்’ டை, ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.இந்த நிலையில், அந்த படம், 2026ம் ஆண்டு, பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவலை, படக்குழுவினர், நேற்று மாலை அறிவித்து, அதற்கான போஸ்டரையும் வெளியிட்டனர்.
படத்தின் பெயருக்கு ஏற்றபடி, விஜய்யின் பின்னணியில், திரண்டு நிற்கும் மக்கள், தங்கள் கைகளை உயர்த்தி, அவரை ஆரவாரத்துடன் வரவேற்பது போல், போஸ்டரின் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.அதைக்கண்டு, தேர்தலுக்கு முன் படம் வெளியாகும் என்ற தகவலால், அவரது ரசிகர் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
youtube : https://youtu.be/97IN49-kX40
facebook : https://www.facebook.com/share/p/1Gd3jJzgAM/
instagram : https://www.instagram.com/p/DHoZZKsSNem/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

