ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வீரதீர சூரன் விக்ரம்
சென்னை:
தங்கலான் படத்திற்கு பிறகு வெளியாகும் நடிகர் விக்ரமின் புதிய படம் வீரதீர சூரன். இந்த படம், வரும், 27ம் தேதி வெளியாகிறது.தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் நிலையில், வீரதீர சூரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்தப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
உருவம் மற்றும் உட் அமைப்பை மாற்றிக்கொள்ளும் சவாலான கேரக்டர்களை, உலக நாயகன் கமலுக்கு அடுத்ததாக, தயக்கமின்றி நடிப்பவர் நடிகர் விக்ரம்தான். அதற்காக கடுமையாக உழைக்கும் கலைஞர்.
அதை அவர் நடித்த சேது, பிதாமகன், ‘ஐ’ தெய்வத்திருமகள், தங்கலான் படங்களில் நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்.இந்த நிலையில், 27ம் தேதி வெளியாகும், ‘வீரதீர சூரன்’ படத்தின் கதைக்களம், ஊர்த்திருவிழா நாளில், ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.
விக்ரமை, எதிரி குழுக்களும், போலீசும் ஒரே நேரத்தில் வேட்டையாட திட்டுமிட்டு விரட்டுகின்றன.அவர், ஒரு காட்சியில், பள்ளிக்கூட மாணவர் போல் டவுசர் மட்டும் அணிந்து, பேர்பாடியுடன் கெத்தாக நடந்து வருவார்.
55 வயதிலும், அந்தக்கலைஞனின் சவாலான நடிப்பிற்கு, மாஸான காட்சியாக, அது உள்ளது.அவருடன், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமோடு, துஷாரா விஜயன், உட்பட பலரும் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் மிரட்ட, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண்குமார் இயக்கத்தில், வீரதீர சூரன் படத்தை, எச்.ஆர்.பிக்சர்ஸ் ரியாசிபு தயாரித்துள்ளார். கோடை விடுமுறையில் வெளியாகும் இந்த படம், விக்ரமின் வெற்றிக்கு கை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
youtube : https://youtu.be/f4umE3R4LzU
facebook : https://www.facebook.com/share/1XV8nnByku/


Pingback: ரசிகர்கள் எதிர்பார்ப்பில் எகிறும் எம்புரான்... - nammaseithi