செய்திகள்

பெண்ணின் போர்வைக்கு தீ வைத்த மூவர் கைது

சென்னை: ஓட்டேரி, திடீர் நகர், பிரிக்ளின் சாலை பகுதியை சேர்ந்தவர் நெபிசா, 58, கணவரை பிரிந்து வாழும் இவர், தன் இளைய மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் வீட்டு வாசலில் படுத்திருந்த போது அதே பகுதியை சேர்ந்த இம்மானுவேல்,19 என்பவர் நெபிசாவின் தலையணையில் தீ வைத்தார்.

இப்பிரச்னையில் இருவரும் சமாதானமான நிலையில், நேற்று இரவு வீட்டருகே நெபிசா, விளம்பர பேனரை போர்த்தி துாங்கினார். அப்போது, இம்மானுவேல் மற்றும் இருவர் சேர்ந்து பேனருக்கு தீ வைத்தனர். சூடு தாங்காமல் சத்தம் போட்ட நெபிசாவின் அலறல் கேட்டு வந்த இளைய மகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து நெபிசா, சென்னை தலைமைச் செயலக காலனி குடியிருப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இம்மானுவேலை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த சிறுவர்கள் இருவரை நேற்று கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *