சர்தார் 2 படத்தின் மிரட்டும் டீசர் வெளியானது
சென்னை:
நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் பட இரண்டாம் பாகத்தின் டீசர், நேற்று வெளியானது.கார்த்தி, தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்த, சர்தார் படம., 2022ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
அதை டைரக்டர் மித்ரன் இயக்கினார். அந்தப்படத்தின் இரண்டாம் பாகம், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாராகிறது. அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நேற்று வெளியானது.
அதை தொடர்ந்து நடந்த, பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர்கள் கார்த்தி, எஸ்ஜே.சூர்யா, டைரக்டர் மித்ரன், தயாரிப்பாளர் லஷ்மண் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.மனிதனின் அத்தியாவசியத்தேவைக்காக நடக்கும் போர்தான், இந்தப்படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நவீன தொழில் நுட்பத்தில் மிரட்டும், கதைக்களம் சைனாவில் நடக்கிறது. அதன், வேறு விறுப்பான காட்சிகளை, டீசரில் காணலாம். இறுதிக்கட்ட படபிடிப்பு நெருங்கி உள்ள, இந்தப்படத்தை லஷ்மண் குமார், இஷான் சக்சேனா தயாரித்துள்ளனர்.
இந்தப்படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளிவிகா மோகனன். ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன்
யோகிபாபு உட்பட பலரும் நடிக்கின்றனர்.வரும். ஜூலை மாதம், படம் வெளியாகலாம். அதற்கான அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
youtube : https://youtu.be/0iSfE830270
facebook :https://www.facebook.com/share/p/1ADKPcWQHr/
instagram : https://www.instagram.com/p/DH5tR2GpHWs/?utm_source=ig_web_copy_link
Trailer link : https://www.youtube.com/watch?v=dXqOYGqLsdA
