ஹலோ ஆபிசர்

விபத்து முனையாகும் ஜி.என்.டி., சாலை தடுப்பது யார் பொறுப்பு..?

சென்னை செங்குன்றம் காய்கறி மார்க்கெட் சந்திப்பு முதல் திருவள்ளூர் கூட்டுச்சாலை வரை, 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு, அந்த சாலையில், நெடுஞ்சாலைத்துறையின் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.அதில், காய்கறி மார்க்கெட் சந்திப்பில் சாலை விளக்கு வெளிச்சமும் இல்லை. அதனால், அந்த சென்டர் மீடியனில் வாகனங்கள் விபத்துகள் ஏற்படுகின்றன.

அதிர்ஷ்டவசமாக, இதுவரை உயிரிழப்புகள் ஏதுமில்லை. கடந்த சில நாட்களுக்கு முன், அந்த இடத்தில் தனியார் பஸ் மோதி சேதமடைந்தது. நேற்று முன் தினம், சென்னையில் இருந்து, திருத்தணிக்கு இரும்பு குழாய்கள் லோடு ஏற்றிச்சென்ற லாரி மோதி பலத்த சேதமடைந்தது.அங்கு, இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.

விபத்திற்கு பிறகு, வாகனங்கள் விரைவாக அகற்றப்படுவதில்லை. அதனால், அடுத்தடுத்த விபத்தும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.விபத்தில் சிக்கிய வாகனம் அகற்றப்படாலும், அடுத்த விபத்து நடக்காமல் இருக்க, போக்குவரத்து போலீசாரோ, நெடுஞ்சாலை த்துறையினரோஉரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

அங்குள்ள வியாபாரிகளும், இந்தப்பிரச்னைக்கு தீர்வு காண முன்வருவதில்லை.இனியும் விபத்து, உயிரிழப்பு நடப்பதை தவிர்க்க, சம்பந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://youtu.be/SOgD8aA_cHo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *