சினிமா

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்வாழ்த்துகள்…

சென்னை:

தமிழகத்தில், நாளை 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு துவங்குகிறது. இது, ஏப்ரல், 15ம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த மாதம், 3ம் தேதி, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கும், 5ம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொது தேர்வுகள் துவங்கின.

அவற்றில் பிளஸ் மாணவர்களுக்கு, 25ம் தேதியும், பிளஸ் 1 மாணவர்களுக்கு இன்றும் தேர்வுகள் முடிந்தன.
அதை தொடர்ந்து, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை துவங்கும் பொது தேர்வு, ஏப்ரல், 15ம் தேதி வரை நடக்கிறது.

இந்த தேர்வை, பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகள் என, 9 லட்சத்து, 13 ஆயிரத்து, 36 பேர் எழுதுகின்றனர். அதற்காக, 4 ஆயிரத்து, 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை கண்காணிக்கும் பணியில், 48 ஆயிரத்து, 426 பேரும், தேர்வு கண்காணிப்பில், 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுவர்.

youtube : https://youtu.be/TYtmEcEbkiU

facebook : https://www.facebook.com/share/p/16Hh7rDoJX/

instagram : https://www.instagram.com/p/DHswDDYp5Wj/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *