சினிமா

நடிகர் பிரஷாந்த், இயக்குனர் ஹரி இணையும் புதிய படம்

சென்னை:


பிராந்த் நடித்த, ‘அந்தகன்’ பட வெற்றிக்குப் பிறகு, அவர் நடிக்கும் புதிய படத்திற்கு பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான திரைக்கதையுடன் சூடு பறக்கும் விதமாக, தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டர் ஹரி இயக்குகிறார்.

நடிகர் பிரஷாந்துடன் இணைந்து, இயக்குனர் ஹரி இயக்கிய, அவரது அறிமுக படம் ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு, இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரானார். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றன.

தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும், இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளம் இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான ஏப்ரல் 6, இன்று இந்த படத்தின் (பிரஷாந்த் 55) அறிவிப்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியானது. ஸ்டார் மூவிஸின் சார்பாக இப்படத்தை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் தயாரிக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *