புதிய படங்கள் ரிலீஸ் சினிமா ரசிகர்கள் உற்சாகம்…
சென்னை
தமிழகத்தில் இன்று, மூன்று புதிய படங்கள், 50க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகின. அவற்றுடன் நடிகர் விஜய், ஆர்யா நடித்த இரண்டு பழைய படங்களும் மறுவெளியீடாக ரிலீசாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிப்பில், ராம் சேவா இயக்கத்தில் ‘எனை சுடும் பனி’ படம் உருவாகி உள்ளது.இந்தப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதாநாயகனாகவும், உபாசனா ஆர்.சி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அவர்களுடன், கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, கூல் சுரேஷ், தானீஷ், சுந்தர்ராஜ் , பில்லி முரளி, பழனி சிவபெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சாண்டி மாஸ்டர் ஒரு பாடலுக்கு நடனமாடியதோடு, நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.கதை திரைக்கதை வசனம் எழுதி, ராம் சேவா இயக்கியுள்ளார். இசை அருள் தேவ், ஒளிப்பதிவு வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி டேஞ்சர் மணி.
‘ட்ரோமா’ இந்த படத்தில் விவேக் பிரசன்னா, பிரதோஷ், ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், பிக்பாஸ் பூர்ணிமா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
தம்பிதுரை மாரியப்பன் இயக்கி உள்ளார்.
அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில், உருவாகி உள்ள ‘அஸ்திரம்’ படத்தில் நடிகர் ஷாம், நிழல்கள் ரவி, நிரஞ்சனி அசோகன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த மூன்று புதிய படங்களுடன், எம். ராஜேஷ் இயக்கத்தில், 15 ஆண்டுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற நடிகர் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜீவா, மொட்டை ராஜேந்திரன் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் தொழில்நுட்ப மாற்றத்துடன் மறுவெளியீடாக ரிலீசாகியது.
அதே போல், தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய், ரீமாசென், வடிவேல், ஜெய்கணேஷ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் பகவதி ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட படங்கள், இந்த வாரம், சினிமா ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு, விருந்தாக அமையும். https://youtu.be/rWIjiIOV9R0
