ஒரே நாளில் இரண்டு திரை உலக பிரபலங்கள் மறைவு…
சென்னை:
ஒரே நாளில் இரு திரை உலக பிரபலங்கள் மறைந்தது, திரை உலகினரை ஆழ்ந்த வருத்தத்திற்கு ஆளாக்கி உள்ளது.சென்னை சேர்ந்தவர் ஷிகான் ஹூசைனி, 60; கராத்தே, வில்வித்தை வீரரும், பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹூசைனி கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார்.
ரத்தப்புற்று நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக, சென்னையில். உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில், 25ம் தேதி அதிகாலை, 1:45 மணி அளவில் காலமானார்.அவரது மறைவிற்கு, திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆந்திர மாநில துணை முதல்வர் கோனிடலா பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு, இயக்குனர் பாரதி ராஜாவின் மகன் மனோஜூம், 48; திடீர் மாரடைப்பால. காலமானார். அவருக்கு அஸ்வதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
மனோஜின் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை உலகினர், இரங்கல் தெரிவித்தனர்.ஒரே நாளில், இரண்டு திரை உலக பிரபலங்கள், உடல் நலக்குறைவால் மறைந்தது, திரை உலகத்தினரிடையே, ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

