மாரீசன் போஸ்டர் ரிலீஸ்
மாரீசன் போஸ்டர் ரிலீஸ்
‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு, நடிகர்கள் பஹத்பாசில், வடிவேல் மீண்டும் இணைந்து மிரட்டும் படம் மாரீசன்.
படக்குழுவினர், படத்தின் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு, வரும் ஜூலை மாதம் படம் வெளியாகும் என, அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் பஹத் பாசில், வடிவேலுவுடன், விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் செய்துள்ளார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப்படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார். இது, இந்த நிறுவனத்தின் 98 வது படம் என்பது குறிப்படத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தொழில்நுட்ப பணிகள் நடக்கிறது. இந்நிலையில், வரும் ஜூலை மாதம் படம் வெளியாகும் என, படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
youtube : http://www.youtube.com/@NammaSeithi
facebook : https://www.facebook.com/share/p/1BoHmzbBW7/

