ரசிகர்கள் எதிர்பார்ப்பில் எகிறும் எம்புரான்…
சென்னை:
விக்ரம் நடித்த ‘வீரதீர சூரன்’ மற்றும் மோகன்லால்,
பிரித்விராஜ் நடித்த ‘எம்புரான் ‘ படங்கள் வரும்., 27ம் தேதி வெளியாகின்றன. இரண்டு படங்களின் டிரெய்லர்கள் மற்றும் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்புகள், அவற்றில் வெளியான சுவாரஸ்யமான தகவல்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை, மேலும் அதிகரித்துள்ளன.
கடந்த, 2019 மார்ச்சில் வெளியான, ‘லூசிபர்’ படத்தின், இரண்டாம் பாகம்தான், நாளை மறுநாள் வெளியாகும் எம்புரான் படம்.இந்த படத்தையும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கி உள்ளார்.
மோகன்லாலின் ஸ்டீபன் கேரக்டரை மையமாக வைத்து அமைக்கபட்டுள்ள கதை, அரசியல் திரில்லர் கதையாக இருக்கும்.
மோகன்லாலுடன், பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர், டேவிட் தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், அபிமன்யூ, சுராஜ் வெஞ்சார மூடு, கிஷோர், இயக்குனர் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மோகன்லாலின் திரை உலக பயணத்தில், லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் அதிக பொருட்செலவில் இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளி் தயாரிக்கட்டுள்ளது.
இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரன் கூறியதாவது, இது அரசியல் படம் அல்ல. ஆனால் கதையோட்டத்தின் பின்னணியில் அரசியல் இருக்கும்.
முதல் பாகமான லூசிபர் படத்தை பார்க்காதவர்கள், இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை பார்த்தால், முதல் பாகம் புரிந்து விடும். அதே நேரம் முதல் பாகத்தை பார்க்கத்தூண்டும். மேலும் மூன்றாம் பாகத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும். அந்த அளவிற்கு கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதனால், இப்போது, L2 என்ற சிக்னேச்சருடன் ‘எம்புரான்’ படம் வெளியாவதைப்போல், அடுத்த சில ஆண்டுகளில், LE3 என்ற சிக்னேச்சருடன் மூன்றாம் பாகம் வெளியாகும் என்றும், நாசூக்காக தெரிவித்தார்.சினிமா ரசிகர்களின் ஆதரவுடன், ‘வீரதீர சூரன்’ மற்றும் ‘எம்புரான்’ படங்கள் வெற்றி பெற வாழ்த்துவோம்.
youtube : https://youtu.be/v268zjsnr8c
facebook : https://www.facebook.com/share/p/1641bYcVcV/
veera deera sooran : https://www.youtube.com/watch?v=f4umE3R4LzU
