செய்திகள்

அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா…

சென்னை:
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில், அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது. அதன் வைர விழா ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா, நேற்று காலை, பக்தர்கள் படை சூழ, பால் அபிஷேகம், காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

அதில், 5,000 க்கும் அதிகமான பெண்கள், ஆலமரம் பகுதியில் இருந்து, பால்குடம் சுமந்து, கோவிலுக்கு பேரணியாக வந்தனர்.

நேற்று மதியம், சிறப்பு அழைப்பாளர் மாதவரம் மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.சுதர்சனம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கான அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவருடன், அறங்காவலர் குழு தலைவரும், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான மீ.வே..கருணாகரன், அறங்காவல் குழு நிர்வாகிகள் ஞானம், ராமு, கருணாகரன், வீரம்மாள், விழாக்குழு நிர்வாகிகள் புண்ய சேகரன், சன் முனியாண்டி, ஞானப்பா, அன்னதான குழு நிர்வாகிகள் அர்ஜூனன், குணசேகரன், பார்த்திபன் மற்றும் பலர் இருந்தனர்.

தொடர்ந்து, 15 நாட்கள் நடைபெறும், திருவிழாவில் செங்குன்றம், பாடியநல்லூர், புழல், மாதவரம், சர்மா நகர் எண்ணூர், சோழவரம் காரனோடை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, சுமார் 1 லட்சம் பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தீமிதி திருவிழாவில் சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.

திருவிழா நடைபெறும் நாட்களில், அன்னதானமும், பல்வேறு நற்பணி மன்றங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மேலும், திருவிழா பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

youtube : https://youtu.be/Ws68QKSNWiQ

facebook : https://www.facebook.com/share/p/16TmRuUED8/

instagram : https://www.instagram.com/p/DH-v_hCpIk8/?utm_source=ig_web_copy_link

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *