சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு
சென்னை:
நாடுமுழுவதும், சமையல் காஸ் சிலிண்டர் விலை, இன்று முதல், ஐம்பது ரூபாய் உயர்ந்தது.
இந்த விலை உயர்வால், மானிய விலையில் சிலிண்டர் வாங்குவோருக்கு, 803 ரூபாயிலிருந்து, 853 ரூபாயாக விலை உயர்ந்தது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்குவோருக்கு, 500 ரூபாயிலிருந்து, 550 ரூபாயாக உயர்ந்தது. அதற்கான அறிவிப்பை, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்ஹர்தீப் பூரி வெளியிட்டார்.
