மாதவரத்தில் குருத்தோலை பவனி…
சென்னை:
சென்னை மாதவரத்தில், குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
மாதவரம் சி.எஸ்.ஐ., அருள் ஆலயம் சார்பில் இன்று காலை நடந்த, குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் பிரார்த்தனை திருப்பலி நிகழ்ச்சிகளை, குருசேகர தலைவர் ஜி.இமானுவேல் ஈஸ்டர் ராஜன், மாதவரம் செபாஸ்தியர் ஆலய பங்கு தந்தை மைக்கேல் ஆனந்த், செங்குன்றம் ஆலய பங்கு தந்தை சந்தோஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதை தொடர்ந்து, மாதவரம் நெடுஞ்சாலை, தபால் பெட்டி சுற்று வட்டார தெருக்களில், குருத்தோலை பவனி நடந்தது.அதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தங்கள் கைகளில், குருத்தோலை ஏந்தி, ஜெப இசை பாடல்களை பாடி, வழிபாடு செய்தனர்.அதை தொடர்ந்து, சி.எஸ்.ஐ., ஆலயத்தில், ஊட்டி நகராட்சி ஆணையாளர் எஸ்.ஸ்டான்லி பாபு மற்றும் ஜெ. கிரேஸ்மேரி ஆகியோர் இறை செய்தி அளித்தனர்.
குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகளில், சி.எஸ்.ஐ., அருள் ஆலய குருசேகர தலைவர் ஜி.இமானுவேல் ஈஸ்டர் ராஜன், செயலாளர் கே.சார்லஸ் சாந்தகுமார், பொருளாளர் எம். ஏசுதாஸ், முன்னாள் பொருளாளர் பொன்டேவிட் சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்குன்றத்திலும், குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. அதிலும் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.
youtube : https://youtu.be/gsl1UJjCUvk


