‘நெடி’ கவிதை புத்தகம் வெளியீடு
சென்னை:
புத்தகம் வாசிப்பது, எழுதுவது இரண்டில் எது மகிழ்ச்சி என்றால், நாம் எழுதியதை மற்றவர்கள் வாசித்து, நம்மை விட கூடுதலாக ரசிக்க வேண்டும். அதுதான் நாம் எழுதியதற்கு நிறைவான மகிழ்ச்சியாகும்.இன்றைய டிஜிட்டல் உலகில், புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது.
ஆனாலும், இலக்கிய தாகம் கொண்ட படைப்பாளிகள், தங்கள் எழுத்துக்களை புத்தகமாக, வாசகர்களுக்கு வழங்கிக்கொண்டுதான் உள்ளனர்.அந்த வகையில் பத்திரிகை துறையை சேர்ந்த தஞ்சை மாவட்ட மண்ணின் மைந்தன் தம்பி தச்சன் நாகராஜன், தனது மற்றொரு கவிதை தொகுப்பு புத்தகத்தமான, ‘நெடி’ யை சமீபத்தில் வெளியிட்டு, நண்பர்களுக்கும், நூலக வாசகர்களுக்கும் வழங்கி மகிழ்வது குறிப்பிடத்தக்கது.
இந்த கவிதை தொகுப்பிற்கு, தஞ்சாவூர் கவிராயர், சிங்க. செளந்தர ராஜன், யாழினி முனுசாமி ஆகியோர் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளனர்.இந்த கவிதை தொகுப்பில் முத்தான, 64 கவிதைகள் பதிவாகி உள்ளன.
அவற்றில்,
என் கவிதைகளை கிழிக்கும் குழந்தையை தடுக்காமல் நின்றேன்
குழந்தை கிழிப்பதே ஒரு கவிதையானதால்…
புதிய பாதையில் செல் என்கிறார்கள்
பழைய பாதையை முழுமையாக பயன்படுத்தாத பாதசாரிகள்…
சுத்தம் சோறு போடும் என்கிறீர்கள்
ஊரெல்லாம் சுத்தம் செய்தவர்களுக்கு என்ன போட்டீர்கள்…
இப்படி, மனித உணர்வுகளின் பல்வேறு முகங்களை குட்டி குட்டி கவிதையாக புத்தகங்களின் பக்கங்களில் அழகிய கோலமாய் வரைந்திருக்கிறார்.அந்த கவிதைகளை படித்துப்பார்ப்போம். ரசித்துப்பார்ப்போம்.
https://www.facebook.com/share/p/1ERATUgWoK/

