சினிமா

‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சென்னை:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும், ‘பிளாக் மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.நடிகர்கள் ரவி மோகன், விஜய் சேதுபதி ஆகியோர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அவர்களுக்கு, படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மற்றும் ‘கண்ணை நம்பாதே’ போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய மு. மாறனுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ், ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார்.

மேலும், பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

மர்ம பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்குமார் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. யிருக்கிறது.இந்த படம் வரும் மே மாதம் வெளியாகிறது.

அதில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக, தேஜு அஸ்வினி நடிக்கிறார். அவர்களுடன், ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ்.இசையமைக்க, கோகுல் பெனோய் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *