செய்திகள்

நம்ம ஊரு கீரை விவசாய சிறப்பு செய்தி…

உடல் நலன் காக்கும் கீரை, காய்கறி சென்னைக்கு உதவும் கிராமங்கள்…

சென்னை: விவசாயத்தில் நெல்லுக்கு அடுத்த முக்கிய உணவு பொருட்களாக இருக்கும் கீரை, காய்கறிகளை, சென்னைக்கு வழங்கும் கிராமங்கள்.

சென்னை செங்குன்றம் அடுத்த கோணிமேடு, பம்மதுகுளம், லட்சுமிபுரம், பழைய பம்மதுகுளம், எராங்குப்பம், மேட்டுப்பாளையம், கிருஷ்ணாம்பேட்டை, சரத்கண்டிகை உள்ளிட்ட ஒன்பது கிராமங்களில், ஆண்டு முழுக்க கீரை, காய்கறி விவசாயம்தான் நடக்கிறது.

வாழ்க்கை சக்கரத்தின் வேகமான சுற்றலில், மனிதனின் வாழ்வாதார தேவைக்காக, உணவு தரும் விளை நிலங்கள் எல்லாம், இன்று வீட்டு மனைகளாக மாறி வருகின்றன.

விலைவாசி உயர்வு, வேலைக்கு ஆட்கள் இல்லை போன்ற பல பிரச்னைகளால், பல்வேறு பகுதிகளில், விவசாயம் கை விட்டாலும், விவசாயத்தை கைவிடாத உழைப்பாளிகளால், மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், கீரை காய்கறி விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனர்.

அங்கு அரை கீரை, சிறு கீரை, பாளைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, முருங்கை கீரை என அனைத்து வகை கீரையும் விளைவிக்கப்படுகின்றன.

அந்த வகையில், 200 ஏக்கர் பரப்பளவில், மக்களின் உடல் நலன் காக்கும் கீரை, காய்கறி விவசாயம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த கிராமங்களில் நாள் ஒன்றுக்கு, காலை, மாலை வேளைகளில், 20 ஆயிரம் கிலோ முதல் 30 ஆயிரம் கிலோ வரை, கீரைகள் அறுவடை செய்யப்படுகிறது.

அவை, செங்குன்றம், மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர், கோயம்பேடு, தி.நகர் மார்க்கெட் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகளிடம், 10 ரூபாய்க்கு வாங்கும் மொத்த வியாபாரிகள், 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்கின்றனர்.

பயிர் செய்து, பராமரித்து, அறுவடை செய்யும், தங்களுக்கு போதிய லாபம் கிடைக்காவிட்டாலும், மக்களின் உடல் நலம் காக்கும் கீரை காய்கறி விவசாயத்தால் மன நிம்மதி கிடைக்கிறது.

அதனால், எத்தனை கஷ்டம் வந்தாலும், விவசாயத்தை கை விடாமல் செய்து வருகிறோம் என்றனர்.

மேலும், உரம் விலையை குறைக்கவும், உணவுப்பொருளான கீரை விவசாயத்திற்கு மானியம் வழங்கவும், அரசு முன் வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

youtube : https://youtu.be/PUg4LUI9BCQ

facebook : https://www.facebook.com/share/p/1BRNthQ3Bq/

instagram : https://www.instagram.com/p/DHx1bd7RLHY/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *