தமிழ் குணசித்திர நடிகர் ரவிக்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
‘இளமை எனும் பூங்காற்று…’ பாடல் மூலம் புகழ் பெற்ற குணச்சித்திர நடிகர் ரவிக்குமார், உடல் நலக்குறைவால் காலமானார்.
கேரளா மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்டவர் ரவிக்குமார், 65; ஆனால் அவர் சென்னையில்தான் பிறந்தார்.
அவர், மலையாளத்தில் லக்ஷ்பிரபு என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன்பின் பல படங்களில் ஹீரோ, குணச்சித்ர வேடங்களில் நடித்தார். இந்த நிலையில், பாலசந்தர் இயக்கிய அவர்கள் படத்தின் மூலம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோருடன் இணைந்து நடித்து, தமிழில் அறிமுகமானார்.
பகலில் ஓர் இரவு படத்தில், நடிகை ஸ்ரீதேவியுடன் நடித்து, இன்னும் பிரபலமானார். அந்த படத்தில் வரும், :இளமை எனும் பூங்காற்று பாடல்’ இவரை அடையாளம் காட்டியது.
தொடர்ந்து தமிழில் மலபார் போலீஸ், ரிஷி, ரமணா, லேசா லேசா, சிவாஜி உள்ளிட்ட, பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.
சினிமா மட்டுமின்றி, ராதிகாவின் சித்தி, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி போன்ற, பல டிவி தொடர்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த நடிகரானார்.
கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்த ரவிக்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை காலமானார்.
facebook : https://www.facebook.com/share/p/14gQWQvLVC/

