செய்திகள்

நடிகர் கார்த்தியின் மதிய உணவு சேவை: மக்கள் நெகிழ்ச்சி

நடிகர் கார்த்தியின் அகில இந்திய மக்கள் நல மன்றம் சார்பாக, வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில், சிறிய உணவகம் நடத்தப்படுகிறது. இதில், 50 ரூபாய் மதிப்புள்ள சுவையான, தரமான வெஜிடபிள் பிரியாணி, 10 ரூபாய்க்கு கிடைக்கிறது.

தினமும், 100 முதல் 150 பேர் வரை, இங்கு மதிய உணவு சாப்பிட்டு, பசியாறுகின்றனர். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் 12.30 மணி முதல் 2:00 மணி வரை, இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் பசிபோக்கும் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், வேலை தேடும் இளைஞர்கள், டிவி, சினிமா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் இங்கு தினமும் வந்து பசியாறி செல்கின்றனர். இந்த உணவகம் தொடங்கி, இதுவரை, 1 லட்சம் பேருக்கு மேல், உணவு சாப்பிட்டுள்ளதாக, கார்த்தி மக்கள் நலமன்றத்தினர் தெரிவித்தனர்.

மேலும்,நடிகர் கார்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மக்களுக்கு உதவும் உணவு சேவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் கூறினர். நடிகர் கார்த்திக்கும், அவரது மக்கள் நல மன்றத்தினருக்கும், எளிய மக்கள் சார்பில் வாழ்த்து சொல்லி, அவர்களின் உணவு சேவை தொடர வரவேற்போம்.

youtube : https://youtu.be/Ly54cDF6x98

facebook : https://www.facebook.com/share/p/1Ed2kxZenC/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *